உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின் கசிவால் கோவிலில் தீ விபத்து

மின் கசிவால் கோவிலில் தீ விபத்து

கரூர், கரூர் அருகே, பிரசன்ன கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.கரூர் மாவட்டம், வெள்ளியணையில் பிரசித்தி பெற்ற, பிரசன்ன கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. அதில் உள்ள மகா மண்டபத்தில் நேற்று இரவு, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், மகா மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த, உற்சவர் திருவீதி உலா செல்லும் வாகனங்கள் சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை