| ADDED : டிச 27, 2025 05:12 AM
பவானி: கேரள மாநிலம் பாலக்காடு அருகே மன்னார்காடு பகுதியை சேர்ந்தவர் ஹசீனா செய்புதின். இவருக்கு சொந்தமான சுற்றுலா பஸ் உள்ளது. இதில் பொருத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த ஆடியோ சிஸ்டங்களை திருடிக் கொண்டு, ஹரியானா பதிவு எண் கொண்ட கன்டெய்னர் லாரியில், கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கொல்கத்தா செல்வதாக, கேரள மாநில போலீசார், சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் சித்தோடு போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் சத்தி மெயின் ரோடு பகுதியில், பாலத்தின் அருகே தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள போலீஸ் சார் தெரிவித்த லாரி வந்தது. நிறுத்தி சோதனை செய்ததில், திருடப்பட்ட ஆடியோ சிஸ்டம், ஆம்பிளிபையர் மற்றும் நான்கு ஸ்பீக்கர் இருந்தது. பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தில் இருந்த இருவரிடம் விசாரித்தனர். ஹரியானா மாநிலத்தை சார்ந்த ஆதில், 28, கதோபி, 38, என தெரிந்தது. இருவரும் பாலக்காடு பகுதியில் எலக்ட்ரிக் கடையில் வேலை செய்ததும், ஹரியானா மாநில லாரி டிரைவருடன் ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி திருடி சென்றதை ஒப்புக் கொண்டனர். இருவரையும் பிடித்து கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.