உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சியில் கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அரவக்குறிச்சியில் கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில், காலையில் சாரல் மழை, மதியத்துக்கு மேல் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுஅரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 6:00 மணி முதலே சாரல் மழை பெய்தது. பின்னர் 11:00 மணி முதல் 1:00 மணி வரை விட்டுவிட்டு மழை பெய்தது. அதன் பின்னர் கனமழையாக 3:00 முதல் 5:00 மணி வரை விடாமல் பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலையும் ஏற்பட்டது. அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், மீண்டும் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ