உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே எரியாத உயர் கோபுர மின்விளக்கு

கரூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே எரியாத உயர் கோபுர மின்விளக்கு

கரூர், கரூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, ரவுண்டானாவில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்கு சரிவர எரியாததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.கரூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, மதுரை சாலை ரவுண்டானாவில், கோவை சாலை, திருச்சி சாலை, கோவை சாலை மற்றும் கரூர் நகர சாலைகள் பிரியும் இடத்தில், உயர் கோபுர மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், அதில் உள்ள பெரும்பாலான மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. மேலும், ரவுண்டானாவை சுற்றி அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களிலும், முழுமையாக விளக்குகள் எரிவது இல்லை. இதனால், மதுரை சாலை ரவுண்டானா பகுதி இரவில் கும்மிருட்டாக காணப்படுகிறது.இதை பயன்படுத்தி, திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது. சில நேரங்களில் விபத்தும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மின் விளக்குகளை இரவு நேரத்தில் எரியும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை