| ADDED : நவ 22, 2025 02:22 AM
கரூர், கரூர் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுபாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் காலி பணியிடங்களுக்கு, நேர்முக தேர்வு வரும், 26ல் நடக்கிறது. இதுகுறித்து, கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கரூர் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் காலி பணியிடங்களுக்கு, எழுத்து தேர்வு கடந்த அக்., 11ல் நடந்தது. தேர்வு முடிவுகள், கடந்த, 17ல் கரூர் மாவட்ட ஆள் சேர்ப்பு இணையதளத்தில் வெளியானது. தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு வரும், 26ல் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடக்கிறது.தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், நேர்முக தேர்வு அனுமதி சீட்டை, www.drbkarur.net என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு, 04324-296138 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.