உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைக்கு கரூரில் வரவேற்பு

ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைக்கு கரூரில் வரவேற்பு

கரூர்: கரூருக்கு பஸ்சில் வந்த ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் வரும், 28 முதல், டிச., 10 வரை ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை விளை-யாட்டுப் போட்டி நடக்கிறது. இப்போட்டி குறித்து தமிழக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்பு-ணர்வு ஏற்படுத்தும் வண்ணம், 38 மாவட்டங்களில் ஹாக்கி உலகக்கோப்பை பஸ்சில் எடுத்து செல்லப்படுகிறது. நேற்று கரூ-ருக்கு வந்தது. இதை கரூர் கலெக்டர் தங்கவேல் வரவேற்றார். இங்கிருந்து, கரூர் மாவட்ட விளையாட்டு மைதானம் வரை பஸ்சில் உலகக்-கோப்பை கொண்டு செல்லப்பட்டது. அப்போது, சிலம்-பாட்டம், ஸ்கேட்டிங், தப்பாட்டம், பறை, பரதநாட்டியம், மேள-தாளம், தேசிய மாணவர் படை அணிவகுப்பு, ஹாக்கி விளை-யாட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்புகளுடன் ஊர்வல-மாக கொண்டு வரப்பட்டு, கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காட்சிபடுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை