| ADDED : நவ 24, 2025 01:22 AM
கரூர்: தேசிய நுாலக வார விழாவில், கரூர் மாவட்டத்துக்கு, ஐந்து விரு-துகள் வழங்கப்பட்டன.தமிழக பள்ளிக்கல்வி துறை, பொது நுாலக இயக்ககம் சார்பில், சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் அரங்கநாதன் விருது வழங்கும் விழா, சமீபத்தில் நடந்தது. அதில், 2024-25 ம் நிதியாண்டில் மாநில அளவில் அதிக உறுப்பி-னர்களை சேர்த்தமைக்கான விருதும், அதிக நன்கொடை பெற்ற நுாலகமாக, கரூர் மாவட்ட மைய நுாலகம் தேர்வு செய்யப்பட்-டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், அதற்கான கேடயங்களை வழங்கினார்.மேலும், மாநில அளவில் அதிக நன்கொடை பெற்ற முழு நேர கிளை நுாலகங்கள் மற்றும் ஊர்ப்புற நுாலகங்கள் பிரிவில், தான்-தோன்றி மலை முழுநேர கிளை நுாலகம், திருகாடு துறை ஊர்ப்-புற நுாலகத்திற்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன.அதேபோல், தான்தோன்றிமலை என்.ஜி.ஓ., நகர் குடியிருப்போர் நலச்சங்கத்துக்கு, மாநில அளவில் சிறந்த நன்கொடையாளர் விருதும், குளித்தலை முழுநேர கிளை நுாலக, மூன்றாம் நிலை நுாலகர் முருகம்மாளுக்கு, டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதும், பாராட்டு சான்றும் வழங்கப்பட்டது.விருது பெற்ற நுாலகர்களுக்கு மாவட்ட கலெக்டர் தங்கவேல், மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.