உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நில அளவை அலுவலர்கள் 3ம் நாளாக போராட்டம்

நில அளவை அலுவலர்கள் 3ம் நாளாக போராட்டம்

கரூர், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், கடந்த, 19 முதல், களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்; நீதிமன்ற பயிற்சி வழங்க வேண்டும்; காலமுறை ஊதியத்தில் புல உதவியாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. நேற்று, மூன்றாவது நாளாக, கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில், 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நில அளவையாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.மாவட்ட துணைத்தலைவர் மோகன்ராஜ், செயலாளர் தங்கவேல், பொருளாளர் தமிழரசன் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் செல்வராணி, அன்பழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை