உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆலையில் லோடு மேன் மயங்கி விழுந்து பலி

ஆலையில் லோடு மேன் மயங்கி விழுந்து பலி

கரூர்: கரூர் மாவட்டம், சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 58; புகழூர் காகித ஆலையில், (டி.என்.பி.எல்.,) லோடு மேனாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம், காகித ஆலையில் உள்ள, கழிப்பிடத்துக்கு சென்ற ஆறுமுகம் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை வேலாயுதம்பா-ளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியில் ஆறுமுகம் உயிரிழந்தார். ஆறுமுகத்தின் மனைவி அஞ்சலை, 50, கொடுத்த புகாரின்படி, வேலாயுதம்பா-ளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை