உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேப்ப மர வாகனத்தில் மாரியம்மன் திருவீதி உலா

வேப்ப மர வாகனத்தில் மாரியம்மன் திருவீதி உலா

கரூர்: கரூர் மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழாவையொட்டி, நேற்று இரவு வேப்ப மர வாகனத்தில் உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது.கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா, கடந்த மே மாதம், 12ல் தொடங்கி வரும், 9 வரை நடக்கிறது. பூச்சொரிதல் விழா, கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது, பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று இரவு, வேப்ப மர வாகனத்தில் உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ