உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பல்வேறு வளர்ச்சி பணிக்கு எம்.எல்.ஏ., பூமி பூஜை

பல்வேறு வளர்ச்சி பணிக்கு எம்.எல்.ஏ., பூமி பூஜை

குளித்தலை, குளித்தலை நகராட்சி பகுதியில், கடம்பர்கோவில் தென்கரை பாசன வாய்க்கால் பாலம், மாரியம்மன் கோவில் யூனியன் நடுநிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம், பெரியார் நகரில் புதியதாக அரசு ஆரம்ப சுகாதார மையம் கட்டுதல், நாப்பாளையம், மணத்தட்டை, வைகைநல்லுார் அக்ராஹாரம் பகுதியில் சாலை அமைத்தல், கிளை நுாலகத்தில் கூடுதல் கட்டடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.நகராட்சி தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். துணைத்தலைவர் கணேசன், கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., மாணிக்கம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். மாநில வர்த்தக அணி துணை செயலர் பல்லவிராஜா, அரசு வக்கீல் சாகுல் மற்றும் தி.மு.க., பொறுப்பாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை