உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் தடுமாற்றம் கரூர், நவ. 22

குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் தடுமாற்றம் கரூர், நவ. 22

கரூர்--மதுரை ரவுண்டானா பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் செல்லும் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது.கரூர் மாவட்டம், தோரணகல்பட்டி பகுதியில் திருச்சி, சேலம், மதுரை தேசிய நெடுஞ்சாலைகள் இணைகின்றன. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் சரிவர செல்லும் வகையில், ரவுண்டானா மற்றும் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதியில் செல்லும் சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. எச்சரிக்கை போர்டுகளும் இல்லை. இதனால், திருச்சியில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளும், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, திருச்சி செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்னர். எனவே, குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து, எச்சரிக்கை பலகைகளை புதிதாக வைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை