உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் ஜவஹர் பஜாரில் செயல்படாத சிக்னல்: விபத்து ஏற்படும் அபாயம்

கரூர் ஜவஹர் பஜாரில் செயல்படாத சிக்னல்: விபத்து ஏற்படும் அபாயம்

கரூர் : கரூர் ஜவஹர் பஜாரில், பல மாதங்களாக போக்குவரத்து சிக்னல் விளக்குகள் செயல்படாமல் உள்ளது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.கரூர் ஜவஹர் பஜாரில் தாலுகா அலுவலகம், கிளை சிறை, தீயணைப்பு நிலையம், வங்கிகள், ஓட்டல்கள், மேல்நிலைப்பள்ளி மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. ஜவஹர் பஜாரில் பல மாதங்களு க்கு முன், போக்கு வரத்து சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டன. தற்போது, சிக்னல் விளக்குகள் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில், சேதம் அடைந்துள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகளால், போக்குவரத்து குளறுபடி ஏற்பட்டு, அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறிய அளவிலான விபத்துகள் ஏற்படுகின்றன.ஜவஹர்பஜார் பகுதியில், பள்ளிக்கூடம் உள்ளதால், மாணவியர்களும் சாலையை எளிதாக கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர் ஜவஹர் பஜார் பகுதியில், சேதம் அடைந்துள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகளை உடனடியாக, போக்குவரத்து போலீசார் சரி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை