உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

குளித்தலை, மார்ச் 9-குளித்தலை அடுத்த, போத்தராவுத்தன்பட்டி பஞ்., வடுகபட்டியில், மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான மந்தக்குளம் இடத்தில், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக பஞ்., பொது நிதியில் இருந்து நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று காலை, 10:00 மணியளவில் அதே ஊரை சேர்ந்த ஒருவர் தனக்கு சொந்தமான இந்த இடத்தில், நீர்த்தேக்க தொட்டி கட்டக் கூடாது என கூறி கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினார். அருகில் இருந்தவர்கள் தட்டி கேட்டபோது, அவர்களையும் தகாத வார்த்தையில் திட்டியள்ளார்.ஆவேசம் அடைந்த பொதுமக்கள், 50க்கும் மேற்பட்டோர் குளித்தலை பஞ்சப்பட்டி நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.இதனால், 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை