உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தார்ச்சாலை அமைத்து தரக்கோரி ஆர்.டி.ஓ.,விடம் கோரிக்கை மனு

தார்ச்சாலை அமைத்து தரக்கோரி ஆர்.டி.ஓ.,விடம் கோரிக்கை மனு

குளித்தலை: குளித்தலை அடுத்த, கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., மஞ்சமேடு மணி நகரில், 5, 6 வது வார்டில் செல்லும் பாதையில் இருந்த ஆக்கிரமிப்பு, கடந்தாண்டு குளித்தலை ஆர்.டி.ஓ., புஷ்பாதேவி முன்னிலையில் அகற்றப்பட்டு, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த பாதையில் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. உடனடியாக தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அப்பகுதி மக்கள் சார்பில், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., அலுவலகத்தில் கடந்த டிச.,13ல் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வாரத்திற்க்குள் சாலை போடுவதாக, தற்போது பணியில் உள்ள ஆர்.டி.ஓ., ரவி உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால், இது வரை மணி நகருக்கு சாலை வசதி குறித்து எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமையில், அப்பகுதி மக்களுடன் நேற்று முன்தினம் மாலை குளித்தலை ஆர்.டி.ஓ., ரவியிடம், தார்ச்சாலை வசதி அமைத்து தர வேண்டும் என நினைவூட்டல் கோரிக்கை மனு அளித்தனர்.இரண்டு நாட்களில் அப்பகுதியில் களஆய்வு மேற்கொண்டு, புதிய தார்ச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ., உறுதி அளித்தார்.ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், கிளை செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் மற்றும் மணி நகர் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ