கரூர்:வட மாநிலங்களில் இருந்து உருளை கிழங்கு வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்து வருகிறது.நாட்டில், உருளை கிழங்கு உற்பத்தியில் உத்தர-பிரதேசம், மேற்கு வங்க மாநிலம் முன்னணியில் உள்ளது. அதை தவிர, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களிலும், உருளை கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தை பொறுத்-தவரை மலைப்பகுதிகளில், உருளை கிழங்கு சாகுபடி நடக்கிறது. கடந்த ஆக., மாதம், வட மாநிலங்களில் இருந்து உருளை கிழங்கு குறைந்-தளவில் தமிழகத்துக்கு வந்தது. இதனால், ஒரு கிலோ உருளை கிழங்கு, 70 ரூபாய் முதல், 80 ரூபாய் வரை விற்றது.ஆனால், நடப்பு டிச., மாத துவக்கத்தில் உத்தரபிர-தேச மாநிலத்தில், உருளை கிழங்கு சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் அறுவடை துவங்கி-யது. மேலும், பஞ்சாப், ஹரியானா மாநிலத்தில் தற்போது அறுவடை தொடங்கிய நிலையில், உருளை கிழங்கு வரத்து கரூர் உழவர் சந்தை மற்றும் காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு மேலும் அதிகரித்துள்ளது. இதனால், உருளை கிழங்கு ஒரு கிலோ விலை, 40 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.