உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பரிசளிப்பு

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பரிசளிப்பு

கரூர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி கலையரங்கத்தில், போதை பொருள் ஒழிப்பு பிரிவின் சார்பில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். குழந்தைகள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் நன்றாக படித்து சிறந்த மாணவர்களாக உயர்ந்த பதவிக்கு செல்ல வேண்டும். போதை பழக்கத்தின் பின்விளைவுகள் பற்றியும் அதன் தீமைகள் குறித்தும் பேசினர். இதனைத் தொடர்ந்து போதை பொருள் விழிப்புணர்வு தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லுாரிகளை சேர்ந்த, 27 மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் ராஜா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்