உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கழிப்பிடம் கட்ட வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்

கழிப்பிடம் கட்ட வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்

குளித்தலை: குளித்தலையில், பொது கழிப்பிடம் கட்ட வலியுறுத்தி, தாலுகா அலுவலகத்தில் பொது மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.குளித்தலை, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் பின்பகுதியில், தென்கரை பாசன வாய்க்கால் கரை அருகில் நகராட்சியின், 7வது வார்டு பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் புதிய கழிப்பட வசதி ஏற்படுத்தி தர வேண்டு மென மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் அடிப்படையில், சில மாதங்களுக்கு முன்பு, கழிப்பிடம் கட்டும் பணி துவங்கியது.இந்நிலையில், கட்டட பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு, மூன்று மாதங்ககளாக நடைபெறவில்லை. இதை கண்டித்து அப்பகுதி மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் முத்து செல்வன் தலைமையில் கட்சியினர் இணைந்து, குளித்தலை காந்தி சிலையிலிருந்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பியவாறு சென்று, தாலுகா அலுவலகம் முன் அமர்ந்து, பொது கழிப்பிடத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.மண்டல துணை தாசில்தார் நீதிராஜன், தலைமை இடத்து துணை தாசில்தார் தீப திலகை, ஆர்.ஐ. தமிழரசி, வி.ஏ.ஓ.. அழகர், குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஒரு வாரத்திற்குள் பணி துவங்க வேண்டும். துவங்காத பட்சத்தில் ஜன., 2ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெறும் என பெதுமக்கள் எச்சரிக்கை செய்து விட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை