உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சங்கிபூசாரியூரில் ரேஷன் கடை திறப்பு

சங்கிபூசாரியூரில் ரேஷன் கடை திறப்பு

குளித்தலை, குளித்தலை அடுத்த தரகம்பட்டி பஞ்., சங்கிபூசாரியூர் கிராமத்தில் (என்ஆர்ஜிஇஎஸ்) திட்டத்தின் கீழ், ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடைக்கான புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது. இந்நிலையில், பணிகள் நிறைவு பெற்றதால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரேஷன் கடை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் சேர்மன் செல்வராஜ் தலைமை வகித்தார். கடவூர் ஒன்றிய ஆணையர் சுரேஷ்குமார், கூட்டுறவு சங்க செயலாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி கலந்து கொண்டு ரேஷன் கடைக்கான, புதிய கட்டடத்தை திறந்து வைத்து. பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை