உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர், தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், தலைவர் சுந்தர கணேசன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிபடி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயது நிரம்பியவர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியவர்களை பாதிக்கும், 2025 நிதி மசோதாவை ரத்து செய்ய வேண்டும், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள, குறைபாடுகளை நீக்க வேண்டும் உள்பட, பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் கோபால், பொருளாளர் பாலசுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் சக்திவேல், பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ