உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு விடுதிகளில் சிலம்பம் பயிற்சி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

அரசு விடுதிகளில் சிலம்பம் பயிற்சி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

கரூர், பிற்படுத்தப்பட்டோர் அரசு விடுதிகளில், சிலம்பம் பயற்சி அளிக்க விரும்பும் நிறுவனங்கள் வரும், 28க்குள் விண்ணப்பிக்கலாம்.கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மாணவியர்களுக்கென, 7 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்கு, சிலம்பம் அடிப்படை பயிற்சி வழங்க நிறுவனம் விண்ணப்பிக்கலாம். சிலம்பம் அடிப்படை பயிற்சியினை ஒரு வாரத்திற்கு, 3 பயிற்சி வீதம், 2 மாதங்களில், 24 பயிற்சி வழங்க வேண்டும். சிலம்பம் அடிப்படை பயிற்சியை பயிற்றுவிக்கும் நிறுவனத்தை, மாவட்ட அளவிலான தேர்வுக் குழு அளவிலேயே தேர்வு செய்யப்படும்.சிலம்பம் அடிப்படை பயிற்சி வழங்குபவரின் நன்னடத்தை சரிபார்க்கப்படும். சிலம்பம் தற்காப்பு கலை பயிற்சியை பொறுத்தவரை, கலை மற்றும் பண்பாட்டு துறையின் இணையதளத்தில் பதிவு செய்துள்ள மற்றும் அத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக இருத்தல் வேண்டும். சிலம்பம் அடிப்படை பயிற்சி வழங்க, தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனமானது அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள் சிலம்பம் பயிற்சி வழங்கிய அனுபவம் இருத்தல் வேண்டும்.கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், முதல் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை வரும், 28 க்குள் வழங்க வேண்டும்.இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை