| ADDED : நவ 21, 2025 02:58 AM
கரூர், நேரு பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான பேச்சு போட்டி டிச.,3ல் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டடத்தில், தமிழ் வளர்ச்சிதுறை சார்பில், முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளையொட்டி டிச.,3ல் அரசு, தனியார் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடக்கிறது. 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கான பேச்சு போட்டி காலை 9:30 முதல் 1:00 மணி வரையிலும், கல்லுாரி மாணவர்களுக்கான போட்டி பிற்பகல் 1:30 மணிக்கு நடக்கிறது.இந்தியாவின் பிரதமராக நேருவின் பணி, அண்ணல் காந்தியின் வழியில் நேரு, பஞ்சசீல கொள்கை ஆகிய தலைப்புகளில் பள்ளி மாணவர்கள் பேச வேண்டும். நேருவின் வெளியுறவு கொள்கை, நேரு இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள், சுதந்திர போராட்டத்தில் நேரு போன்ற தலைப்புகளில் கல்லுாரி மாணவர்கள் பேசலாம்.பள்ளி தலைமை ஆசிரியர், கல்லுாரி முதல்வர் ஆகியோர் அனுமதியுடன் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண்- 04324 - 255077 ஐ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.