உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாணவி மாயம்: போலீசில் புகார்

மாணவி மாயம்: போலீசில் புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த, பொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி, 26. இவருடைய அக்கா லட்சுமி, 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அக்காவின் கணவர் சின்னத்துரை, வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார்.இதையடுத்து, 17 வயதுடைய அக்கா மகளை பராமரித்து பிளஸ் 2 வரை படிக்க வைத்து வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 5 மதியம் வீட்டிலிருந்த சென்ற அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது அக்கா மகளை காணவில்லை என, சுப்புலட்சுமி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை