உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து படுகாயம்

டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து படுகாயம்

அரவக்குறிச்சி: உப்புபாளையம் பிரிவு பகுதியில், டூவீலரில் வேகமாக சென்றவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.புகழூர் அருகே காளிபாளையம் பூலாம் காட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் சிதம்பரநாத், 47. இவர் நேற்று முன்தினம் இரவு, ஈரோடு - கரூர் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் உப்புபாளையம் பிரிவு அருகே வந்தபோது, வேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் சிதம்பரநாத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது. உட-னடியாக அவரை மீட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவம-னையில் அனுமதித்தனர். வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை