உள்ளூர் செய்திகள்

டூவீலர் மாயம்..

குளித்தலை : திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சுண்டக்காம்பட்டியை சேர்ந்தவர் பால்ராஜ், 37. இவர் கடந்த, 25 இரவு, 9:00 மணியளவில், கோட்டைமேடு, தேவேந்திர தெருவை சேர்ந்த உறவினர் ஜெகநாதன் வீட்டின் முன் தனக்கு சொந்தமான, 'ஹீரோ ஸ்பிளண்டர்' டூவீலரை நிறுத்திவிட்டு துாங்க சென்றார். அதிகாலை எழுந்து பார்த்தபோது பைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. டூவீலரை காணவில்லை என பால்ராஜ் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை