மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
8 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
8 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
8 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
8 hour(s) ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், 185வது உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு, வட்ட போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில், போட்டோ எடுக்கும் போட்டிகள் ஏற்கனவே நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் நேற்று, மாநிலத்தலைவர் சிவக்குமார் தலைமை வகித்து சான்றிதழ்கள் வழங்கினார். மாவட்ட தலைவர் அசோக்பாபு முன்னிலை வகித்தார். நகர சங்க தலைவர் ராஜ்குமார், செயலாளர் சரவணன், பொருளாளர் ராஜேஷ், அமைப்பாளர் சரவணன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். * ஓசூரில், ராஜாஜி ஓசூர் மாநகராட்சி போட்டோ, வீடியோகிராபர்ஸ் வெல்பேர் அசோசியேஷன் சார்பில், ஹெல்மெட் அணிய இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஓசூர் ராம்நகரில் டி.எஸ்.பி., பாபுபிரசாந்த் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். ஓசூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தேன்கனிக்கோட்டை போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கம் சார்பில், அரசு மருத்துவமனை உள்நோயாளிகள் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவிற்கு, பிஸ்கட் மற்றும் பிரட் வழங்கப்பட்டது.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago