உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் மாநகராட்சி கணக்கு குழு கூட்டம் ரூ.246 கோடி வரவு, செலவு கணக்கு சமர்ப்பிப்பு

ஓசூர் மாநகராட்சி கணக்கு குழு கூட்டம் ரூ.246 கோடி வரவு, செலவு கணக்கு சமர்ப்பிப்பு

ஓசூர் : ஓசூர் மாநகராட்சி கணக்கு குழு கூட்டம், தலைவர் பார்வதி நாகராஜ் தலைமையில் நடந்தது. உதவி கமிஷனர் (கணக்கு) கும-ரேசன் முன்னிலை வகித்தார். கணக்கு அலுவலர் சரவணன் வர-வேற்றார். கூட்டத்தில், 2024 - 25 ம் ஆண்டுக்கான வரவு, செலவு உத்தேச விபரங்கள் அடங்கிய பட்டியல் தாக்கல் செய்யப்-பட்டன. அதன்படி, வருவாய், குடிநீர், கல்வி நிதி மற்றும் திட்-டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மூலமாக நடப்பாண்டு மாநக-ராட்சிக்கு, 246 கோடியே, 13 லட்சத்து, 82 ஆயிரம் ரூபாய் வருவாய் வரும் என கணக்கிடப்பட்டது.அலுவலர்கள், ஊழியர்களுக்கு ஊதியம், வளர்ச்சி திட்ட செல-வுகள் என மொத்தம், 245 கோடியே, 88 லட்சத்து, 73 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும், 25.09 லட்சம் ரூபாய் கையிருப்பு இருக்கும் எனவும் கணக்கிடப்பட்டது. கவுன்சிலர்கள் ரஜி-னிகாந்த், மல்லிகா தேவராஜ், பாக்கியலட்சுமி, மாநகராட்சி உதவியாளர் சத்தியா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை