உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கால்வாயில் அடைப்பு எடுக்கும் இயந்திரத்தை இயக்கி சோதனை

கால்வாயில் அடைப்பு எடுக்கும் இயந்திரத்தை இயக்கி சோதனை

ஓசூர்: ஓசூர் மாநகராட்சியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் விற்-பனை செய்த குடியிருப்பு பகுதிகளில் பாதாள சாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், நகரில் பல இடங்களில் வாகனங்களை நிறுத்தவும், வீட்டின் முன் பகுதியிலும், சாக்கடை கால்வாய் மீது சிமென்ட் சிலாப்புகளை மக்கள் அமைத்துள்ளனர். பாதாள சாக்கடை மற்றும் சிலாப்பு அமைத்த கழிவுநீர் கால்வாய்-களில் அடைப்பு ஏற்படும்போது, அதை சரிசெய்வது, மிகவும் சவாலான விஷயமாக உள்ளது.இதனால், மாநகராட்சி நிர்வாகம் மூலம், 15வது நிதிக்குழு மானிய நிதியில் இருந்து, 36 லட்சம் ரூபாய் மதிப்பில், அடைப்பு எடுக்கும் இயந்திரத்துடன் கூடிய லாரி வாங்கப்பட்டுள்ளது. அதை, மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, கமிஷனர் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலையில், பழைய நகராட்சி அலுவ-லகம் முன் நேற்று சோதனையாக, மாநகராட்சி ஊழியர்கள் இயக்கி பார்த்தனர். மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜாராம், மாநகர நல அலுவலர் பிரபாகரன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை