மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
10 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
10 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
10 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
10 hour(s) ago
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் சிவப்பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:கந்திகுப்பம் தனியார் பள்ளியில் நடந்த என்.சி.சி., முகாமில், 13 மாணவியருக்கு, பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது மிகவும் வருத்தமும், மன வேதனையும் அளிக்கிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவியர், தாளாளரிடமும், நிர்வாகத்திடமும் எடுத்து சொல்லியும், மாணவியரை சமாதானப்படுத்தி உள்ளனர். இதில் தொடர்புடைய, 3 பெண்கள் உட்பட, 11 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையில், என்.சி.சி., பயிற்சி அளித்த சிவராமன் போலி என தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தில் போலீசாரின் வேகம் பாராட்டுக்குரியது. சம்பவத்தை மூடி மறைக்க பார்த்த, பள்ளி நிர்வாகத்துக்கும், சம்பவத்தை கண்டு கொள்ளாமல் இருந்த, பள்ளிக் கல்வி துறைக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு முன், அரசு உதவி பெறும் பள்ளியில் நடந்த பாலியல் துன்புறுத்தல்களை கவனத்தில் கொண்டு அனைத்து பயிற்சிகளுக்கும், ஒரு நிலையான நடைமுறைகளை, கலெக்டரின் அனுமதி பெற்று, அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago