உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சரியான லெவல் கொடுத்து போடாத ரிங்ரோடு வாகனங்கள் குலுங்குவதால் பயணிகள் அவதி

சரியான லெவல் கொடுத்து போடாத ரிங்ரோடு வாகனங்கள் குலுங்குவதால் பயணிகள் அவதி

ஓசூர்: ஓசூர் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே இருந்து, சீத்தாராம் மேடு வரை இன்னர் ரிங்ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாகன நெரிசல் அதிகரித்ததால், 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இ.எஸ்.ஐ., மருத்துவமனை முதல், தளி ரயில்வே கேட் வரை, 4.5 கி.மீ., துாரத்திற்கு, 42 கோடி ரூபாய் மதிப்பில், 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. சாலை சரியான லெவல் வைத்து போடாத காரணத்தால், சாலையில் கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது குலுங்குகின்றன. அதனால், வாகனத்திற்குள் இருக்கும் பயணிகள் கடும் அவதியடைகின்றனர்.சாலையின் தரத்தை சமீபத்தில் சேலம் வட்ட நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். ஆனால், சாலை லெவல் சரியாக இல்லாததை அவர் கண்டறியவில்லை. சாலை லெவல் மோசமாக இருப்பது குறித்து, ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர்களே, ஓசூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. சாலை லெவல் மோசமாக இருப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக போலீசாரும் கூறுகின்றனர். நெடுஞ்சாலைத்துறை சரியாக ஆய்வு செய்து, லெவல் மோசமாக இருக்கும் இடத்தை சீரமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை