உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.3.56 கோடி மதிப்பு திட்டப்பணிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கம்

ரூ.3.56 கோடி மதிப்பு திட்டப்பணிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கம்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வேப்பனஹள்ளி, சூளகிரி, ஓசூர் ஊராட்சி ஒன்றியங்களில், 3.56 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி, சூளகிரி மற்றும் ஓசூர் ஊராட்சி ஒன்றியங்களில், 3.56 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை பணிகள், நுாலக கட்டடம் உள்ளிட்ட புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்து, 1.64 கோடி ரூபாய் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், ஊராட்சி மன்ற கட்டடம், சுகாதார பிரிவு கட்டடம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளையும், அமைச்சர் சக்கரபாணி நேற்று திறந்து வைத்தார்.அப்போது அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:தமிழக முதல்வர் ஸ்டாலின், நமக்கு தேவையான திட்டங்களை பார்த்து பார்த்து வழங்கி வருகிறார். மகளிர் சுய உதவிக்குழு கடன், 12 லட்சம் ரூபாயிலிருந்து, 20 லட்சம் ரூபாய், மாதந்தோறும், 1.16 கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. விடுபட்ட தகுதியான நபர்களுக்கும் இம்மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. காலை உணவுத்திட்டம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களுடன், தமிழ்ப்புதல்வன் திட்டமும் துவங்கப்பட உள்ளது. தவிர, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில், 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க உள்ளார்.இவ்வாறு, அவர் பேசினார்.ஓசூர், சப் கலெக்டர் பிரியங்கா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் மலர்விழி, மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை