உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஓசூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்து, தெருவோர வியாபாரிகள் கடை வைத்துள்ளனர். அதேபோல், விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல், பாதசாரிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, ஓசூர் டவுன், ஹட்கோ ஸ்டேஷன் போலீசார் பாதுகாப்புடன், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையோரம் ஆக்கிரமித்த வைத்திருந்த தெருவோர கடைகள், விளம்பர பேனர்களை, ஓசூர் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு செயற்பொறியாளர் நாராயணசாமி, நகரமைப்பு அலுவலர் சீனிவாசன், ஆய்வாளர் மலர்விழி ஆகியோர் தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர். தொடர்ந்து, நகர் பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ