| ADDED : மே 10, 2024 02:42 AM
பென்னாகரம்;பென்னாகரம் அடுத்த கிருஷ்ணாபுரம் அரசு ஆண்கள் விடுதியிலிருந்து, மேக்லான்திட்டு, பூனைகுண்டு, காட்டுக்கொள்ளை உள்ளிட்ட பகுதியில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன், 3 கி.மீ., தொலைவிற்கு தார்ச்சாலை போடப்பட்டது. இச்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அவ்வழியே செல்லும் டூவீலர் ஓட்டிகள், பெயர்ந்து காணப்படும் ஜல்லி கற்களால் தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்குகின்றனர்.இப்பகுதி விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை இரவில் சந்தைக்கு எடுத்து செல்ல வேண்டி உள்ளது. காலை, மாலை பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று வரும் மாணவ, மாணவியரும், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.எனவே, மாவட்ட நிர்வாகம், இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, உடனடியாக தார்ச்சாலையை சீரமைத்துத்தர வேண்டுமேன, கோரிக்கை விடுத்துள்ளனர்.