உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு

கிருஷ்ணகிரி: தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில், நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்ய உள் தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் தர்மபுரி கோட்டம் மூலமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிமேனஹள்ளி - பண்ணந்துார் சாலையில், கட்டகாலன்கொட்டாய் என்ற இடத்தில் சாலை பணியை நெடுஞ்சாலைத்துறை கோவை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் தலைமையில் ஆய்வு செய்தனர். அப்போது, சாலையின் தரம் மற்றும் அளவுகள், அடர்த்தி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.கோவை கோட்ட பொறியாளர் பிரசன்ன வெங்கடேசன், தர்மபுரி கோட்ட பொறியாளர் நபார்டு மற்றும் கிராம சாலைகள் லோகநாதன், சேலம் கோட்ட பொறியாளர் (தரக்கட்டுப்பாடு) வத்சலா வித்யானந்தி, உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை