உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மது விற்பனையை போலீசுக்கு போட்டு கொடுத்தவர் கொலை

மது விற்பனையை போலீசுக்கு போட்டு கொடுத்தவர் கொலை

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி அருகே சின்ன பேளகொண்டப்பள்ளியை சேர்ந்த விவசாயி முனிராஜ், 68. இவரது மூத்த மகள் சின்ன புட்டம்மாவின் மகன் வேல்முருகன், 18; பிளஸ் 2 மாணவன். இவருடன் முனிராஜ் டூ - வீலரில், மத்திகிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுவிட்டு, நேற்று மாலை வீடு திரும்பினார். மத்திகிரி கால்நடை பண்ணை அருகே, இரு டூ - வீலர்களில் வந்த மூவர் மறித்து, முனிராஜை அரிவாளால் வெட்டி கொன்று தப்பினர். மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தினர்.கிராமத்தில் நடக்கும் சட்ட விரோத செயல்கள் குறித்து போலீசுக்கு முனிராஜ் தகவல் தெரிவித்து வந்துள்ளார். சின்ன பேளகொண்டப்பள்ளியில் சிலர், கர்நாடகா மாநில மது வகைகளை விற்பதாக தகவல் தந்துள்ளார். ஆத்திரமடைந்தவர்கள் கொலை செய்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக சின்ன பேளகொண்டபள்ளியை சேர்ந்த நாகராஜ், 55, என்பவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை