உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 110 பேர் கைது

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 110 பேர் கைது

கிருஷ்ணகிரி: தி.மு.க., அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், 110 பேரை போலீசார் கைது செய்தனர்.தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத, தி.மு.க., அரசை கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, சாலை மறியல் போராட்டம் நடந்தது. அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிராம நிர்-வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் பூபதி மறியல் போராட்டத்தை துவக்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க செயலாளர் கல்-யாணசுந்தரம், பொது நுாலகத்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் சண்முகம் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.மறியல் போராட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு ஊழியர்க-ளுக்கு அமல்படுத்த வேண்டும். அரசுத்துறை-களில் காலியாக உள்ள லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்து-ணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊர்ப்புற நுால-கர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் உள்-ளிட்ட சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்-பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கால-முறை ஊதியம், சட்டபூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் பணி-யாற்றும் சாலைப்பணியாளர்களின், 41 மாத பணிநீக்க காலத்தை, சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி, பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்-கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்-பினர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறி-யலில் ஈடுபட்ட, 110 பேரை, போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை