உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோடைகால பயிற்சி முகாம் கிருஷ்ணகிரியில் 372 பேர் பங்கேற்பு

கோடைகால பயிற்சி முகாம் கிருஷ்ணகிரியில் 372 பேர் பங்கேற்பு

கிருஷ்ணகிரி:மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்து வரும், கோடை கால பயிற்சி முகாமில், 372 மாணவ, மாணவியர் பயிற்சி பெற்று வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் கடந்த, 29ல் துவங்கியது. முகாம் காலை, 6:30 முதல், 8:30 மணி வரையும், மாலை, 4:30 முதல், 6:30 மணி வரையும் நடக்கிறது. இதில், தடகளம், ஹேண்ட் பால், ஜூடோ, குத்துச் சண்டை, தேக்வாண்டோ, கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதேபோல், ஓசூர் மற்றும் ஊத்தங்கரை மினி விளையாட்டு அரங்கிலும் கோடை கால பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இதில், 242 ஆண்கள், 130 பெண்கள் என மொத்தம், 372 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.முகாமில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் மற்றும் விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைத்து மாணவ, மாணவியரும் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை, 200 ரூபாய் செலுத்தி, மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பெயர்களை பதிவு செய்ய, 74017 03487 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை