உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தனியார் நிறுவன இன்ஜினியரை கொல்ல முயன்ற 4 பேர் கைது

தனியார் நிறுவன இன்ஜினியரை கொல்ல முயன்ற 4 பேர் கைது

ஓசூர்: கெலமங்கலம் அருகே, தனியார் நிறுவன இன்ஜினியரை கொல்ல முயன்ற, 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே நர்த்தம்பட்டியை சேர்ந்தவர் வீரமணி, 23, தனியார் நிறுவன இன்ஜினியர்; அதே நிறுவனத்தில், ஓசூர் பேரண்டப்பள்ளியை சேர்ந்த ராமமூர்த்தி, 26, என்பவர், டிரைவராக பணியாற்றுகிறார். இவர், காருகொண்டப்பள்ளி கூட்ரோடு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில், தவறான இடத்தில் மண்ணை கொட்டியதால், இன்ஜினியர் வீரமணி அவரை திட்டியுள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. டிரைவர் ராமமூர்த்தி தன் நண்பர்களான, ஓசூர் அடுத்த பன்னப்பள்ளியை சேர்ந்த தனியார் கல்லுாரி ஆம்புலன்ஸ் டிரைவரான சிவசங்கர், 26, நாரிகானபுரம் மஞ்சுநாத், 26, பெங்களூரு மனோஜ், 25, ஆகியோருடன் சேர்ந்து, இன்ஜினியர் வீரமணியை இரும்பு கம்பி மற்றும் மரக்கட்டையால் தாக்கி கொல்ல முயன்றார். இதில் படுகாயமடைந்த வீரமணி, பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக, தனியார் நிறுவனத்தின் சக இன்ஜினியரான, வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டாவை சேர்ந்த ரஞ்சன்குமார், 43, புகார் படி, கெலமங்கலம் போலீசார், ராமமூர்த்தி, சிவசங்கர், மஞ்சுநாத், மனோஜ் ஆகிய, 4 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை