உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 87.82 சதவீதம் தேர்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 87.82 சதவீதம் தேர்ச்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில், 87.82 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழகம் முழுவதும் பிளஸ் 1 தேர்வு கடந்த மார்ச், 4-ல் தொடங்கி, 25- வரை நடந்தது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 108 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், 5 பகுதிநேர நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் 80 தனியார் பள்ளிகள் உள்பட, 193 பள்ளிகளை சேர்ந்த, 21,592 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். தேர்வெழுதிய, 10,210 மாணவர்களில், 8,449 பேரும், தேர்வெழுதிய, 11,382 மாணவியரில், 10,514 பேரும் தேர்ச்சியடைந்தனர். அதாவது மாணவர்கள், 82.75 சதவீதமும், மாணவியர், 92.37 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பிளஸ் 1 தேர்ச்சி விகிதத்தில், 87.82 சதவீதத்துடன், மாநில அளவில், 31வது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டில், 86.12 சதவீதமாக இருந்த பிளஸ் 1 தேர்ச்சி விகிதம் தற்போது, 1.70 சதவீதம் அதிகரித்துள்ளது.தொகரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி மாதிரிப்பள்ளி ஆகிய அரசு பள்ளிகள், கிருஷ்ணகிரி புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, ஓசூர் ஜான் பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி ஆகிய அரசு உதவி பெறும் பள்ளிகளும், பிளஸ் 1 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதுதவிர மாவட்டத்திலுள்ள, 41 தனியார் பள்ளிகள், பிளஸ் 1 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. ஓசூர் ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 46.27 சதவீதமும், வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 47.22 சதவீத தேர்ச்சியுடனும், மாவட்டத்தில் கடைசி இடங்களை பிடித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை