உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / லாரி மீது பைக் மோதல்; நண்பர்கள் இருவர் பலி

லாரி மீது பைக் மோதல்; நண்பர்கள் இருவர் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே பதிமடுகு கிராமத்தை சேர்ந்தவர் ரூபேஸ், 22; கட்டிக்கானப்பள்ளி, பாரதியார் நகரை சேர்ந்தவர் சூசைராஜ், 27; நண்பர்களான இருவரும் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். யமாஹா பைக்கில், கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மாலை, 4:30 மணிக்கு கிருஷ்ணகிரி நமாஸ் பாறை மேம்பாலம் அருகே இருவரும் சென்றனர். அப்போது முன்னால் சென்ற லாரியின் பின்னால் பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்தில் பலியாகினர். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை