உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கலெக்டர் ஆய்வு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி-களை, மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., அலுவலகம், புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பழையபேட்டை ஐ.இ.எல்.சி., நடுநிலைப்-பள்ளி, கந்திகுப்பம் புனித சவோரியார் நடுநிலைப்பள்ளி, பர்கூர் தாலுகா அலுவலகம் ஆகியவற்றில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மற்றும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான தினேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார்.தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, ''மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளில் மொத்தமுள்ள, 16.80 லட்சம் வாக்காளர்களில், 15.15 லட்சம் பேருக்கு என, 90.16 சதவீதம் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன,'' என்றார்.ஆய்வின் போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், தனித்துணை கலெக்டர் அபிநயா, தாசில்தார்கள் ரமேஷ், சின்னசாமி உட்பட உடனிருந்தனர். அதேபோல், ஓசூர் சின்ன எலசகிரி, பேரண்டப்-பள்ளி மற்றும் ஜூஜூவாடி கிராமங்களில், எஸ்.ஐ.ஆர்., படி-வங்கள் வழங்கப்பட்டு வருவதை, ஓசூர் தாசில்தார் குணசிவா ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ