உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வாங்கிய ‍மொபைலுக்கு டிஜிட்டலில் பணம்; மோசடி சிறுவன் கைது

வாங்கிய ‍மொபைலுக்கு டிஜிட்டலில் பணம்; மோசடி சிறுவன் கைது

ஓசூர்: ஓசூர், பாகலுார் சாலையில் தேவகுமார், 33, என்பவர் மொபைல் கடை நடத்தி வருகிறார். கடந்த, 18ல் மதியம் இவரது கடைக்கு வந்த, 17 வயது சிறுவன், கடையிலிருந்த, 33,700 ரூபாய் மதிப்புள்ள ஒரு மொபைலை வாங்கினார். அத்தொகையை பார்கோடு மூலமாக ஸ்கேன் செய்து செலுத்தி விட்டதாக கூறி, அங்கிருந்து செல்ல முயன்றார்.அவர் மீது சந்தேகமடைந்த தேவகுமார், அக்கவுண்டில் எதுவும் தொகை வந்துள்ளதா என பார்த்த போது, எதுவும் வராததும், அச்சிறுவன், ‍‍மொபைல்போனை எடுத்து செல்ல முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து தேவகுமார், சிறுவனை பிடித்து, ஓசூர் அட்கோ போலீசில் ஒப்படைத்தார். சிறுவனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை