உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அனுமதியின்றி மணல் அள்ளிய 4 ஜே.சி.பி.,க்கள் பறிமுதல்

அனுமதியின்றி மணல் அள்ளிய 4 ஜே.சி.பி.,க்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி தென்பெண்ணை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய நான்கு ஜே.சி.பி.,க்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி அடுத்த வேப்பனப்பள்ளி சுற்று வட்டார பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் அனுமதியின்றி ஜே.சி.பி., மூலம் மணல் அள்ளப்பட்டு வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக போலீஸாருக்கு புகார் வந்தது.எஸ்.பி., கண்ணன் உத்தரவின் பேரில் வேப்பனப்பள்ளி இன்ஸ்பெக்டர் சையத்பாபு மற்றும் போலீஸார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, ஐபிகானப்பள்ளி, நாச்சிகுப்பம், கங்கமடுகு ஆகிய பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த நான்கு ஜே.சி.பி.,க்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ.,விடம் போலீஸார் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை