உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி நகரில் 10,000 பேருக்கு தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்

கிருஷ்ணகிரி நகரில் 10,000 பேருக்கு தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகருக்கு உட்பட்ட பகுதிகளில், 10,500 பேருக்கு, தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கும் பணி துவங்கியது.கிருஷ்ணகிரி நகருக்கு உட்பட்ட பகுதிகளில், தி.மு.க.,வில் புதிதாக சேரும் உறுப்பினர்கள் மற்றும் மாற்று கட்சிகளிலிருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தவர்களுக்கு, உறுப்பினர் அட்டை விண்ணப்பிக்கும் பணி கடந்த, 5 மாதங்களாக நடந்து வந்தது. இதில், கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தி.மு.க., உறுப்பினர்களுக்கு விண்ணப்பித்த, 10,500 பேருக்கு உறுப்பினர் அட்டை, தி.மு.க., தலைமையின் ஒப்புதலோடு வந்தது.கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., அறிவுறுத்தல் படி, தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் பரிதா நவாப் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர செயலாளர் நவாப் தலைமை வகித்து பேசியதாவது: கிருஷ்ணகிரி நகராட்சியிலுள்ள, 33 வார்டுகளில் இருந்து ஏராளமானோர், தி.மு.க., உறுப்பினர் அட்டைக்கு விண்ணப்பித்தனர். அவர்களில், 10,500 பேருக்கு உறுப்பினர் அட்டை வந்துள்ளது. மீதமுள்ளோருக்கும் விரைவில் வரும். அனைவருக்கும் அந்தந்த பகுதி நகராட்சி கவுன்சிலர்கள் வீடு தேடி வந்து, உங்கள் உறுப்பினர் அட்டையை வழங்கி, உங்கள் பகுதி குறைகளையும் கேட்பர். இவ்வாறு, அவர் பேசினார். அப்போது, நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை