உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி /  தி.மு.க.,வினர் தாக்கிய காட்சிகள்: வீடியோ வைரல்

 தி.மு.க.,வினர் தாக்கிய காட்சிகள்: வீடியோ வைரல்

கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே மாசிநாயக்கனப்பள்ளியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம், 62. இவரது வீட்டையொட்டி, அவரது தம்பி சுலைமான், 65, வீடு உள்ளது. இருவருக்கும் வீட்டின் நிலத்தை பிரிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. தனக்கு வேண்டிய வீட்டின் நிலத்தை, ஊர் நிர்வாகத்திடம் சுலைமான் ஒப்படைத்து விட்டார். அது அரசு புறம்போக்கு நிலம் எனக்கூறி, அந்த இடத் திலுள்ள வீட்டை, நேற்று அப்பகுதியை சேர்ந்த சிலர் இடித்து அகற்றியபோது, அதையொட்டிய அப்துல் ரஹீம் வீடும் சேதமானதால் அவரும், அவரது குடும்பத்தினரும் தடுத்தனர். அதனால், தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சம்பத் மற்றும் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் புஷ்பாவின் கணவர் சர்வேஷ் ஆகியோர், ஊர்மக்களுடன் சேர்ந்து, அப்துல் ரஹீமின் மகன் பாபா பஷீர் மற்றும் இரு பெண்கள் உட்பட மொத்தம், 5 பேரை தாக்கினர். அப்துல் ரஹீம் குடும்பத்தை, தி.மு.க.,வினர் தாக்கிய காட்சிகள், 'சிசிடிவி' கேமராவில் பதி வாகி, தற்போது வைரலாகி வருகிறது. கெலமங்க லம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி