உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கல்வி கடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்வி கடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி தனியார் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய வங்கி இணைந்து கல்விக்கடன் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இதை, மாவட்ட கலெக்டர் சதீஷ் தொடங்கி வைத்து பேசினார். பொருளாதாரத்தில் பின் தங்கிய, பல மாணவர்கள் தங்கள் கனவு படிப்பை தொடர நல்ல வாய்ப்பு. அதிக கட்டணம் உள்ள பாடப்பிரிவுகளான மருத்துவம், பொறியியல், வெளிநாட்டு கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, கல்விக்கடன் ஒரு பெரிய ஆதாரமாக இருக்கும். இதன் முக்கியத்துவம் கருதி, தமிழ்நாடு அரசு தர்மபுரி மாவட்டத்திற்கு, 1,500 மாணவர்களுக்கு, 40 கோடி ரூபாய் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இலக்கை அடைவதற்கு, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியில், மாநில கடன் வழிகாட்டி வணங்காமுடி, சி.இ.ஓ., ஜோதி சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை