கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரியில் நேற்று, தி.மு.க., கிழக்கு மாவட்ட இளைஞரணி அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்ராஜன், துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து பேசியதாவது:துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாள் வரும், 27ல் கொண்டாடப்படுகிறது. அதை சிறப்பான வகையில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதி செயலாளர்கள் தலைமையில் நடக்கும் விழா, பொதுக்கூட்டங்களில் இளைஞரணியினர் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். தி.மு.க., பேச்சாளர்கள், கூட்டம் நடக்கும் இடங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மக்கள் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில், இளைஞர்கள், மாணவர்கள் பெருவாரியாக பங்கேற்கின்றனர். அவர்களில் பள்ளி மாணவ, மாணவியர் பலருக்கு கண் பார்வை பிரச்னைக்கு கண் கண்ணாடி அணிய மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி கிருஷ்ணகிரி நகரில், 750 பள்ளி மாணவ, மாணவியர் உள்பட கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 2,000 மாணவர்களுக்கு, தி.மு.க., மாவட்ட நிர்வாகம் சார்பில் கண் பார்வை பிரச்னை உள்ளவர்களுக்கு கண்ணாடி வழங்கப்பட உள்ளது. மேலும், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளின் துவக்க விழா துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளில் துவக்கி வைக்கப்பட உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்..