| ADDED : நவ 25, 2025 01:30 AM
கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வன உரிமைச்சட்டம்-2006ன் கள சரிப்பார்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2025-26ம் ஆண்டில், வன பகுதிகள் மற்றும் வனத்தை ஒட்டி வசித்து வரும் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாத மக்களுக்கு, வன உரிமைச்சட்டம்-2006ன் கீழ், தனி நபர் உரிமை மற்றும் சமுதாய உரிமை மற்றும் பிற உரிமைகள் வழங்குவதற்கான கள சரிபார்ப்பு பயிற்சி, வனச்சரக அலுவலர்களுக்கும் மற்றும் வன உரிமை குழு உறுப்பினர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இதில், தனி நபர் உரிமை, வன மகசூல்பெறுதல் போன்ற சமுதாய உரிமை மற்றும் பிற உரிமைகள் குறித்த தெளிவுரை, உரிமையை பெற தேவையான ஆவணங்கள் குறித்த தெளிவுரை எடுத்துரைக்கப்பட்டது. இவ்வாறு, அவர் பேசினார்.மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.