உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர் திருவிழா ஆலோசனை கூட்டம்

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர் திருவிழா ஆலோசனை கூட்டம்

ஓசூர்:ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா வரும், 18 ல் துவங்குகிறது. வரும், 24 இரவு சுவாமி திருக்கல்யாணம், 25 காலை தேரோட்டம், 27 ல் தெப்பல் உற்சவம் நடக்கிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். அதனால், தேர்த்திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், தேர் கமிட்டி தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான மனோகரன் தலைமையில், தேர்ப்பேட்டையில் உள்ள கல்யாணசூடேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, கவுன்சிலர் கிருஷ்ணவேணி ராஜி மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.அதன்படி, வரும், 24 ல் நடக்கும் சுவாமி திருக்கல்யாணத்தை, பக்தர்கள் நெரிசல் இல்லாமல் காணும் வகையில், கோவிலுக்கு வெளியே மேடை அமைத்து, பக்தர்களுக்கு அமர தேவையான இருக்கைகள் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்துவது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, தேரோட்டத்தின் போது, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்துவது. குடிநீர், சாலை வசதி, கழிவறை உள்ளிட்ட வசதிகளை பக்தர்களுக்கு செய்து கொடுப்பது. திருவிழாவின் போது அமைக்கப்படும் கடைகளை இடையூறு இல்லாமல் அமைக்க செய்வது. பக்தர்கள் வந்து செல்வதற்கான பாதை வசதி என, பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை