உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் மாநகராட்சி நகரமைப்பு குழு கூட்டம்; போக்குவரத்து நெரிசலை தடுக்க யோசனை

ஓசூர் மாநகராட்சி நகரமைப்பு குழு கூட்டம்; போக்குவரத்து நெரிசலை தடுக்க யோசனை

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி நகரமைப்பு குழு கூட்டத்தில், போக்குவரத்து நெரிசலை தடுக்க, மேம்பாலம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி நகரமைப்பு குழு கூட்டம், தலைவர் அசோகாரெட்டி தலைமையில் நேற்று நடந்-தது. நகரமைப்பு செயற்பொறியாளர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அங்கீகரித்த மனைப்பிரிவுகளில் பூங்காவிற்கு ஒதுக்-கிய இடங்களை பாதுகாக்க வேண்டும். தாலுகா அலுவலக சாலை, எம்.ஜி.,ரோடு, நேதாஜி ரோட்டில், வாகனங்களை ஒழுங்-குப்படுத்த, போக்குவரத்து போலீசாரை கேட்டுக் கொள்வது; எம்.ஜி.,ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, அங்-குள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை வேறிடத்திற்கு மாற்றி, அரசு இடத்தில் நிரந்தர சார்பதிவாளர் அலுவலகம் கட்ட, அரசுக்கு பரிந்துரை செய்வது; ஆக்கிரமிப்பை தடுக்க, அரசு புறம்போக்கு மற்றும் ஏரிகளில் முள்வேலி அமைப்பது. ஜூஜூவாடியில், சேத-மாகி, குத்தகை புதுப்பிக்கப்படாமல் உள்ள, ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழுமத்திற்கு சொந்தமான இடத்திலுள்ள கட்டடங்-களை அகற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.நகரமைப்பு குழு தலைவர் அசோகாரெட்டி பேசுகையில், ''ஓசூர் - பாகலுார் சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க, ஜி.ஆர்.டி., பகுதியில் பட்டர்பிளை மேம்பாலம் அமைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடைகளை அகற்றி, சாலை ஆக்கிரமிப்-புகளை அகற்ற வேண்டும்,'' என்றார்கவுன்சிலர் குபேரன் பேசுகையில், ''நகரமைப்பு கூட்டத்தை, 2 மாதத்திற்கு ஒருமுறை நடத்த வேண்டும். மாநகராட்சியில் உட்-கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை. பூங்காவை சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு மனமில்லை,'' என்றார்.கவுன்சிலர்கள் சிவராம், புஷ்பா, மம்தா, மஞ்சம்மாள், நகரமைப்பு அலுவலர் சீனிவாசன், ஆய்வாளர் மலர்விழி உட்பட பலர் பங்-கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி